சோஷியல் மீடியா பற்றி தகவல்களும், அதில் சில மாற்றங்களும் எப்போதும் வந்த வண்ணமே இருக்கின்றது. இப்பொழுது ஆட் டூ மேப் என்ற புதிய வசதியை உருவாக்கி உள்ளது பேஸ்புக். இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் புதிய இடங்களை பற்றிய தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட இடம் பற்றிய தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த இடத்தை சுற்றியுள்ள மற்ற முக்கியமான அம்சங்களையும் தெளிவாக குறிப்பிட்டு காட்டிவிடுகிறது இந்த புதிய பேஸ்புக் வசதி. இதற்காக, பிரத்யேக பட்டனும் ஆட் டூ மேப் அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த புதிய வசதியின் மூலம் குறிப்பிட்ட இடத்தை பற்றிய தகவல்களை நண்பர்கள் மூலம் எளிதாக பரப்ப முடியும் என்கிறது பேஸ்புக்.