காதல் தோல்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வார்கள். நயன்தாரா முற்றிலும் ஸ்பெஷல். காதல் போனால் என்ன, சினிமாவில் சாதித்துக் காட்டுறேன் என்று அதிரடியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இனி வானமே எல்லை.
பிரபுதேவாவின் சீட்டிங்கிற்கு பதிலடியாக நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களே நப்பாசையுடன் திரிவதைப் பார்க்கையில் ஆச்சரியமாகயிருக்கிறது. அப்படியானால் சிம்பு ரசிகர்கள்? சொல்லவே வேண்டாம். விட்டால் போஸ்டர் அடிப்பார்கள். சிம்புவைப் பொறுத்தவரை நயன்தாராவுடன் ஜோடி சேர்வதற்காகவே ஒரு படம் நடிக்கத் தயார். இம் என்ற ஒரு வார்த்தைப் போதும்.
இவர்கள் இருவரையும் மீண்டும் - திரையில் - சேர்த்து வைக்க இருவருக்கும் பொதுவான நண்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மீண்டும் இருவரும் இணைந்து மாஸ்டரின் முகத்தில் இங்க் தெளிக்கலாம் என்கிறது ஜொள்ளர்கள் வட்டாரம்.