வாடிக்கையாளர்களை வெகுவாக தொழில் நுட்பத்திலும், வடிவமைப்பிலும் கவர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வழங்க உள்ளது. தற்பொழுது தான் மும்பையில் பிளாக்பெர்ரி சர்வர் சேவையை இந்தியாவிற்கு அமைத்து கொடுத்த பிளாக்பெர்ரி நிறுவனம்
அதற்குள்ளாக இன்னொரு சவுகரியத்தினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பிளாக்பெர்ரியின் புதிய ப்ளேபுக் டேப்லடிற்காக 2.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கி உள்ளது இந்நிறுவனம். இந்த புதிய இயங்குதளத்தை எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்யவும் முடியும். இந்த புதிய பிளாக்பெர்ரி ஓஎஸ்ஸில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதில் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களையும் பெற்று பயனடையலாம்.
இதில் இன்னும் பிரத்தியேகமான நவீன வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக பிளாக்பெர்ரியின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெப் பிரவுசிங், மல்டிமீடியா, மல்டிடாஸ்கிங் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் ப்ளேபுக் டேப்லட் வழங்கும். இந்த புதிய ப்ளேபுக் டேப்லட் ரூ.19,990 விலையில் 64ஜிபி மாடலை எளிதாக பெற முடியும்.