டைட்டானிக் சொகுசுக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நினைவு தினம் வரும் ஏப்ரல் 15ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. டைட்டானிக் சொகுசுக் கப்பல் கட்டப்பட்ட பிறகு முதன்முதலாக இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடந்த 1912ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்தது. அந்த கப்பலில் 2,200 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.
புறப்பட்ட 4வது நாள் இரவு 11.40 மணிக்கு டைட்டானிக் ஒரு ராட்சத பனிப்பாறையின் மீது மோதியிதில் அது இரண்டு துண்டுகளாகப் பிளந்து கடலில் மூழ்கியது. அப்போது கப்பலில் இருந்த 705 பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் 1,522 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நடந்து தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது.
கப்பல் மூழ்கியதன் 100வது ஆண்டு நிறைவு தினம் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துயர சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் ஆகியும் அது நம் நினைவை விட்டுப் போகவில்லை. இந்த 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் டைட்டானிக் படம் பொறிக்கப்பட்ட 5 பவுண்ட் காசு வெளியிடப்பட்டுள்ளது.