உலகை பதற வைக்கும் வீடியோ நாளை வெளியீடு!


உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சிகளை லண்டனின் சேனல் 4 நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர்களும் நாளைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர்.

பல நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது.


ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்ட வெறிச்செயல், ஈனச் செயல், இனவெறி கொடூரம் குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த ஆண்டு சேனல் 4 நிறுவனம் வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.


இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை அது உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி நாளை இரவு 10.55 மணியளவில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4 நிறுவனம்.


இந்த வீடியோ படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட கொடூரக் காட்சி அடங்கியுள்ளது. மேலும் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.


இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நாலரை மணியளவில் காணலாம்.


ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள் உலக சமுதாயத்தை வெகுண்டெழச் செய்து, இலங்கையை வீழத்தும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஈழப் போரில் நீதி கேட்டும் நிற்கும் ஈழத் தமிழர்களும், உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களும் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


குறிப்பாக நாளைய வீடியோவில் தங்களது தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி இருக்குமோ என்ற பதைபதைப்பும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget