இன்றும் உலக அளவில் வசூலில் இரண்டாம் இடத்தில் டைட்டானிக் இருக்கிறது. முதலிடம் அவதார். டைட்டானிக்கை இன்று வெளியிட்டாலும் காதல் ஜோடிகள் திரையரங்கை ஹவுஸ்ஃபுல்லாக்க காத்திருக்கிறார்கள். நமக்கே இது தெரியும் போது தயாரிப்பாளருக்குத் தெரியாமல் இருக்குமா. தயாரிப்பாளர் Jon Landu டைட்டானிக்கை 3டி-யில் வெளியிடுகிறார். அடுத்த மாதம் இப்படம் அமெரிக்காவில் 3டி யில் வெளியாகிறது. இது பற்றி குறிப்பிட்ட Jon Landu அவதார்
படம்தான் எங்களுக்கு டைட்டானிக்கை 3டி-யில் உருவாக்கும் ஐடியாவையும், நம்பிக்கையும் தந்தது என்றார். அவதாருக்குப் பிறகு 3டி-யில் படத்தை எடுக்க இயக்குனர்களைவிட தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் ஒரு மோசமான படத்தை 3டி எந்தவிதத்திலும் காப்பாற்றப் போவதில்லை என்று மேலும் அவர் தெரிவித்தார்.
டைட்டானிக் 3டி ஆக மாற்றம் பெற 18 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் இதனை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை Jon Landu-க்கு இருக்கிறது.