5.மாட்டுத்தாவணி
பவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.
4.மை
மாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
3.ஊலலலா
ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.
2.3
இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவின் மூன்று படம். மூன்று வாரங்கள் தாண்டிய பிறகும் மோசமில்லாத வசூல். சென்ற வார இறுதியில் இப்படம் 15.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 5.3 கோடி.
1.ஒரு கல் ஒரு கண்ணாடி
தொடர்ந்து முதலிடத்தில் ராஜேஷின் படம். இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.99 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் வார இறுதி வசூலைவிட இது அதிகம். முதல் பத்து தினங்களிலேயே இப்படம் சென்னையில் 4.21 கோடிகளை வசூலித்து அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது