நான் இந்த மென்பொருளை பற்றி ஒரு பத்து வருடம் முன்பு கூறியிருந்தால் உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க உதவியதற்கு என்னை மிகவும் பாராட்டியிருப்பீர்கள் (ஏன்டா முன்னாடியே சொல்லலைன்னு
திட்டாம இருந்தா சரி), ஏனென்றால் அப்பொழுது ஒளி வருடி (ஸ்கேனர்), அச்சு பொறி (பிரிண்டர்), தொலை நகலி இயந்திரம் (fax மெசின்) அனைத்தும் அடங்கிய இயந்திரம் மிகவும் விலை அதிகம், ஆனால் இப்பொழுது மிகவும் கம்மி விலைக்கு கிடைக்கின்றன. இருந்தாலும் இந்த மென்பொருளை பகிர்ந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை.
தங்களிடம் ஒரு ஒளி வருடி மற்றும் ஒரு அச்சு பொறி உள்ளது, நீங்கள் எப்படி ஒளி பிரதி எடுப்பீர்கள் ? மிகவும் சரி, நானும் உங்களை போல் தான் இந்த மென்பொருளை கண்டறிவதற்கு முன் அந்த முறையை பயன்படுத்தி வந்தேன். நாம் ஒளி பரதி எடுக்க விரும்பும் கோப்பை பெயிண்டு புரோகிராமில் (Paint Program) ஸ்கென் செய்ய வேண்டும் பிறகு அதை பிரிண்டு செய்ய வேண்டும், இதற்கு சில நிமிடங்கள் ஆகும்.
அதுவே இந்த iCopy மென்பொருள் நம்மிடம் இருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் ஒளி வருடி-யில் என்னென்ன கோப்புகளை வைக்கிறோமோ அவை அனைத்தையும் ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளைக் கொண்டு கோப்பின் பிரைட்னெஸ் (brightness), கான்டிராஸ்டு, (contrast), காப்பிகளின் எண்ணிக்கை போன்றவற்றை தீர்மானிக்கலாம்.
iCopy மிக சிறிய மென்பொருள் என்பதால், அதை மிக சுலபமாக நம் பென் டிரைவில் காபி செய்து கொள்ளலாம். iCopy இது ஒரு விண்டோஸ் மென்பொருள், ஆகவே விண்டோஸ் கனிணியில் மட்டுமே பயன்படுத்த முடியும், மாக் (Mac) கணிணியில் பயன்படுத்த இயலாது.