மேலும் படங்கள் |
இந்தப் படத்தில் மிதுன், ரிஷி பூட்டாணி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மான்சி, மற்றும் காயத்ரி நடிக்கின்றனர். அஞ்சலி என்கிற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்க,
அவருடன் நான்கு சிறுமிகளும் நடித்துள்ளனர்.
ரவிபிரகாஷின் கதைக்கு ரஞ்சித் போஸ் திரைக்கதை எழுதி உள்ளார். ரவிபிரகாஷ், ரஞ்சித் போஸ் இருவரும் இணைந்து வசனம் எழுதி உள்ளனர். அதே போல ரஞ்சித் போஸ் படத்தை இயக்கி படத்தொகுப்பும் செய்துள்ளார். எல்.வி.கணேசன் இசையமைக்க, பாடல்களை பழனிபாரதி, யுகபாரதி, முத்துவிஜயன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
சமுதாயத்தில் வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் மூன்று குடும்பங்களின் பிரச்சனைகளை மூன்று வயது சிறுமி தீர்த்து வைக்கும் கதையில், கணவன் மனைவிக்கு இடையே ஆன புரிதலின் அவசியம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் என சராசரி குடும்பத்தின் சம்பவங்களை நகைச்சுவையோடு படமாக்கி உள்ளனர்.
குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்தப் படம் மஹாபலீஸ்வரர் பகுதியில் படமாக்கி உள்ளனர்.