நடிப்பு: விஷ்ணுப்ரியன், ஸ்வேதா பாசு, ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு: பத்மாலயா சினி விஷன்
இயக்கம்: கோபலான்
இசை: கண்ணன்
காதலி சொன்னால் மட்டுமே அந்த வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் விஷ்ணு, மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.
ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளனாக இருக்கும் அவர், பணம் போதவில்லை என்றால் இரவு நேரத்தில் தெருவில் உள்ள வீடுகளில் இரும்பு கேட், மோட்டார எஞ்சின், நாய்குட்டி என கிடைத்ததை திருடி, சந்தையில் விற்று பணமாக்குவார்.
அவர் திருந்த ஒரு வாய்ப்பு தருகிறார், அவரை விரும்பும் காதலி. அதன் படி அரசியலில் இறங்கி கவுன்சிலர் ஆகி, சந்தர்பப வசத்தால் மேயர் ஆகிறார். இதனால் முன்னாள் மேயரின் கோபத்துக்கு ஆளாகிறார். அவரிடமிருந்து எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்பது மீதி படம்.
முதல் பாதி வரை ஜாலியாக செல்லும் கதை, இரண்டாவது பாதியில் முடிவுக்காக எங்கங்கோ செல்கிறது.
ஏற்கனவே பார்த்த முகம்தான் விஷ்ணுப்ரியன். அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். படம் முழுக்க பட்டையை கிளப்பும் நடிப்பு. பிச்சு உதறுகிறார். அவருடிடைய காதலியாக ஸ்வேதா பாசு. அருமையான வசனங்களை பேசும் போது அப்ளாஸ் வாங்குகிறார். வில்லனாக வந்து செங்கல் சூளைக்கு பலரை அனுப்பும் ஜெயப்பிரகாஷ், கடைசியில் அதே கதியை அடைகிறார். மிரட்டலான நடிப்பும், பார்வையும் என மனதில நிற்கிறார். விஷ்ணு நண்பராக வருபவரும், ஸ்வேதா தந்தையாக வருபவரும் இயல்பான நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர்.
கண்ணன் இசையில் பாடல்கள் பரவா இல்லை ரகம். என்னை ஜெயிக்க வைக்கவில்லை என்றால் உங்களை நான் காப்பத முடியாது என்று பயமுறுத்தி ஓட்டு வாங்குவது நம்பும்படி இல்லை. மற்றபடி படத்தை படு எண்டர்டெயிமெண்டாக கொண்டு சென்ற இயக்குநர் கோபாலன், கிளைமாக்ஸில் இன்னும் யோசித்திருக்கலாம். மற்றபடி வேலூர் பகுதியை நினைவுக்கு கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.