ஏல்லொருக்கும் இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும், விண்வெளிக்கு விண்கலம் மூலம் செல்ல வேண்டும் அல்லது தொலை நோக்கி (டெலஸ்கொப்பு) மூலமாகவாவது விண்வெளியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு நம் வருமானம் (கண்டிப்பா என்னுடையா வருமானம்) போதாது. நமக்கு மைகிரோஸாப்டு உதவும். அட ஆமாங்க மைகிரோஸாப்டு காரங்க நம் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள். ரொம்பத்தான் ஆசை அவங்க நம்மல அங்க அனுப்ப மாட்டாங்க,
ஆனா அதற்கு பதிலா அவர்களுடைய "WorldWide Telescope" மூலமா விண்வெளியை நமக்கு காட்டுவார்கள். இந்த மென்பொருள் நம் கணிணியை ஒரு தொலை நோக்கி கருவியாக மாறி விடும். பல பெரிய விஞ்ஞானர்கள் வழிகாட்டுதலில் நாம் நம் இடத்தில் இருந்தபடியே விண்வெளியை ஒரு வலம் வரலாம்.
WorldWide Telescope மைகிரோஸாப்டுக்கு சொந்தமானது என்பதால் இதை நிறுவ தங்களிடம் Winsdows XP SP2-வோ அல்லது Windows Vista / 7 வோ இருக்க வேண்டும். அது மட்டுமின்றி Direct X version 9 மற்றும் .NET Framework 2.0 நிறுவி இருக்க வேண்டும். தங்களிடம் மிக அதி வேகமான இணையதளம் இருந்தால் நலம். மிக அதிகமான தரவுகளை இது சேமிக்கும் என்பதால் அதிக அளவு கணிணியில் இடம் இருத்தல் நலம்.