நடிப்பு: ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா, திவ்யா பண்டாரி, தலைவாசல் விஜய், சேகர் பிரசாத், கஞ்சா கருப்பு, பட்டிமன்றம் ராஜா, ராணி, சிட்டிபாபு, கணேஷ்,
தயாரிப்பு: ஜி.சம்பத், எஸ்.ராம்பாபு, டி.கலைச்செல்வம் – மார்சல் பவர் மீடியா
இயக்கம்: ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா
இசை: சேகர் சந்திரா
ஒளிப்பதிவு: ஆர்.ஜி.சேகர்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்
தலைவாசல் விஜய், ஓ போடு ராணி இவர்களின் மகன் சூர்யா (ஜோதிகிருஷ்ணா). தன்னை ஒரு பிகர் கூட பார்க்க வில்லையே என்று வருத்தத்தில் இருக்கிறார். அவரது நண்பன் சேகருடன் இணைந்து டூ வீலரில் செல்லும் போது, ப்ரீத்தியை (கதாநாயகி திவ்யா பண்டாரி) பார்க்கிறார். அவரை அவருக்கு ரொம்ப பிடித்து போகிறது.
அதனால் ப்ரீத்தி பின்னாலே சென்று, அவள் வேலை செய்யும் ஹோட்டல், திரும்பும் நேரம், செல்லும் பாதை, அவளது வீடு என அனைத்தையும் தெரிந்து கொள்கிறார். அதே போல அவள் ஆசை, விருப்பம் என அனைத்தும் அவள் பக்கத்து வீடு குண்டு பெண் மூலம் தெரிந்து கொள்கிறார்.
அவளை சந்தித்து பேசி தனது காதலை தெரிவிக்க படாத பாடுபடுகிறார். அதே தெருவில் வசிக்கும் வில்லன் கணேஷ் குழுவிடம் மாட்டிக் கொண்டும் அவஸ்தை படுகிறார். அவர்களுக்கு டிமிக்கியும் கொடுக்கிறார். ஒரு வழியாக ப்ரீத்தியின் தந்தை பட்டிமன்றம் ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவரை காப்பாற்ற உதவுகிறார். அதனால் ப்ரித்தியின் பார்வை அவர் மேல் விழுகிது.
ஆரம்பத்தில் சில நிபந்தனைகளுடன் நட்போடு பழகும் ப்ரீத்தி, நாளடைவில் சூர்யாவின் மீது காதல் கொள்கிறார்.
சூர்யாவை அழகை ரசிப்பதோடு ஆள் பாதி இருந்தவனை ஆடை பாதி கொடுத்து அழகானவனாக மாற்றுகிறார். அந்த அழகைப் பார்த்து பல பெண்கள் சூர்யாவிடம் வந்து பழகுகின்றனர்.
அதைக் கண்டு அதிர்ந்து போகிறார் ப்ரீத்தி. தனது காதலை சொல்ல முடியாமலும், அவனிடம் பழகும் பெண்களிடம் இருந்து அவனை பிரிக்க முடியாமலும் அவஸ்தை படுகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் செல் போன் தொலைந்து போகிறது. அதை எடுக்கும் வில்லன் கணேஷ் கும்பல், அதில் சூர்யுவக்கு ப்ரீத்தி கொடுத்த முத்தம் விஷூவலாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதோடு, அதை எம்.எம்.எஸ். மூலமாக எல்லோருக்கும் அனுப்புகின்றனர். இதனால் ப்ரீத்தி வெளியோ நடமாட முடியாத நிலை உருவாகிறது.
சூர்யாவின் அம்மா ராணி, உடல் நிலை சரியின்றி இறந்து போகிறார். இதனால் தன் மீது பாசம் வைத்துள்ள தந்தையை பற்றி அவர் புரிந்து கொள்கிறார். அதே போல காதலியின் அருமையையும் புரிந்து கொள்கிறார். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும், தனது காதலை தெரிவிக்கவும் சூர்யா ப்ரீத்தி வீட்டுக்கு செல்ல, அங்கே :பரீத்தி வீடு பூட்டப்பட்டு இருக்கிறது.
ப்ரீத்தி எங்கே போனாள்?. இருவரும் இணைந்தார்களா என்பதே மீதி படம்.
தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒரு கலகலப்பான காதல் கதையை படமாக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா. படம் முழுக்க நகைச்சவை காட்சிகள்தான் கொடிகட்டி பறக்கிறது. கடைசியில் மனதை டச் பண்ணும் அருமையான செண்டிமெண்ட் காட்சிகளும் உண்டு..
முதல் படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு தனது அளவான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. அவருக்கு ஜோடியாக வரும் திவ்யா பண்டாரி செண்டிமெண்ட் காட்சிகளில் நெஞ்சை தொடுகிறார். பாடல் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டுகிறார்.
ஆரம்பத்தில் கோபக்கார கணவனாகவும், முடிவில் நல்ல தந்தயைகவும் மனதில் நிற்கிறார் தலைவாசல் விஜய். அவரது மடினவியாக வரும் ராணி, கவர்ச்சியாக ஆடுவதில்தான் கில்லாடி என்றால் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். அழகான நல்ல அம்மா தமிழுக்கு கிடைத்திருக்கிறார்.
நண்பனாக வரும் சேகர்பிரசாத், பக்கத்து குடித்தனகாரர் சிட்டிபாபு, ஸ்திரிகடை கஞ்சா கருப்பு, உதவியாளர் பகோடா பாண்டி, மொட்டை சதீஷ், வில்லன் கணேஷ் என அனைவரும் சிரிக்க வைத்துள்ளனர்.
சேகர் சந்திரா இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன. பாடல்களில் மட்டுமல்லாது காட்சிகளிலும் ஆர்.ஜி.சேகரின் கேமிரா கவிதை படைக்கிறது.
ஊலல்லலா -. ந்லல பொழுதுபோக்கு