ரஜினியின் கோச்சடையான் புதிய தகவல்!


ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோஸில் நடந்தது. அதன்பின் சென்னை வந்து ஓய்வு எடுத்துக்கொண்ட படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டது.  முதல்கட்ட படப்பிடிப்பே லண்டனில் நடந்தபோது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பதில் திருவனந்தபுரம் ’சித்ராஞ்சலி’. திருவனந்தபுரத்திலுள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் தான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.

ஏன் கேரளாவிலுள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என விசாரித்தபோது இரண்டு காரணங்கள் தெரிய வந்தன.சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் பிரிவில் பணிபுரிபவர்கள் பல விருதுகளை வாங்கியுள்ளனர். சினிமா உலகின் பிரபல இயக்குனர்கள் தங்கள் படங்களை இந்த ஸ்டூடியோவில் தான் எடுத்திருக்கிறார்கள். 


மற்றொரு முக்கிய காரணம் அந்த பகுதி மந்திரியான கணேஷ் குமார் ரஜினியின் தீவிர ரசிகராம். கோச்சடையான் படக்குழு அங்கு படப்பிடிப்பு நசத்த எல்லா ஏற்பாடுகளும் அவர் தான் செய்து கொடுத்திருக்கிறாராம். தனிமையான இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அங்கு 1,2,3 என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோச்சடையான் படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது என்பது தான் தமிழ் சினிமாவின் இப்போதைய சூடான பேச்சு.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget