பேஸ்புக், ட்விட்டர், பிளாக்ஸ்பாட் என பல்வேறு சமூக இணையதளங்களில் திரைநட்சத்திரங்களும் இணைந்து பொதுமக்களுடன் பொழுதுபோக்குவது இப்போதைய வழக்கமாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமாகும் திரைக் கலைஞர்கள் முதல் முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் வரை இந்த வலைதளங்களில் உறுப்பினராக சேர்ந்து தங்களது
அன்றாட நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் பெயரில் ரசிகர்கள் சிலரே ஒரு அக்கவுண்ட் துவங்கி அவர்களை பற்றிய தகவல்களை பகிர்ந்துவந்தனர்.
ஃபேஸ்புக்கில் கமல்ஹாஸன் பெயரில் பல அக்கவுண்டுகள் ஆரம்பிக்கப் பட்டதால் இதில் கமல்ஹாஸனின் உண்மையான அக்கவுண்ட் எது என்று ரசிகர்கள் குழும்பியிருந்தனர்.
இதையறிந்த கமல் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட் பற்றி பேசும்போது ” வணக்கம். நான் ஃபேஸ்புக்கில் இல்லாதது பற்றி பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன். நான் வந்ததற்குப் பின் அது நான் தானா? என்ற சந்தேகம் இருந்தது. இது என்னுடைய தனிப்பட்ட அக்கவுண்ட். உங்களுடன் பேசுவதற்காக நான் ஆரம்பித்தது.
உங்களுக்காகத்தான் இந்த நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். மற்ற நண்பர்களும் என் பெயரில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் நடத்துவது. அது வேறு இது வேறு.
நான் உங்களுக்காக ஆரம்பித்தது தான் இந்த அக்கவுண்ட் https://www.facebook.com/kamalhaasan.theofficialpage நீங்களும் வாங்க நானும் வருவேன்” என்று கூறினார்.