டைட்டில் வேட்டை என்றவுடன் சந்தானம் ஏதோ படம் எடுக்கிறார் என்று நினைக்க வேண்டாம், எல்லாம் அவருக்கு ஒரு அடைமொழிக்கான வேட்டை தான் அது. சந்தானம் திரையில் தோன்றினால் திரையரங்கம் அதிரும் அளவிற்கு வரவேற்பு எழுகிறது. இது போதாதா அவருக்கு ஒரு டைட்டில் சேர்த்துக் கொள்ள. எனவே, வைகைப் புயல் போன்ற அடைமொழி வரிசையில் சந்தானத்திற்கு என்ன டைட்டில்
சேர்க்கலாம் என ரூம் போட்டு டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளனராம் அவரது நண்பர்கள். எனவே விரைவில் சந்தானத்திற்கு முன் அடைமொழி தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!