தனுஷ் அசத்தலில் மரியான் - படப்பிடிப்பு ஆரம்பம்!


3 படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன. இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.

பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.


தென் ஆப்ரிக்காவில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் படமாக்கப்படாத இடங்களில் மரியான் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.


கோடை விடுமுறை என்பதால்படப்பிடிப்புக்கு தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவையும் அழைத்துச் சென்றுள்ளார் தனுஷ்.


இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இந்தியில் 3 படத்தை வெளியிடவிருக்கிறார் தனுஷ்!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget