ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் திரை முன்னோட்டம்


நயன்தாராவுக்கு ஆந்திராவில் எதிர்ப்பையும், பாராட்டையும் பெற்றுத் தந்த ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் வருகிற 18ஆம் தேதி தமிழில் வெளியாகிறது. திருமணமான பிரபுதேவாவுடன் காதலில் இருக்கும் நயன்தாரா எப்படி சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்ப்பு கிளம்பியது. ராமனாக பாலகிருஷ்ணா என்ற பவர்ஃபுல் நடிகர் இருந்ததால் எதிர்ப்பு பிசுபிசுத்தது, படப்பிடிப்பு நிறைவு நாளில் நயன்தாரா அழுதது
, நயன்தாராவைவிட்டால் இந்த கேரக்டருக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என எதிர்த்தவர்களே பாராட்டியது என பல விஷயங்கள் நடந்தேறிய படம் இது.


பாபு என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராமாணயத்தின் இறுதிப் பகுதிதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ராமர், சீதையின் புத்திரர்களான லவ, குசா வரும் பகுதிகள். சுவாரஸியம் குறைவான பகுதி என்பதாலும் என்டிஆர் ஏற்கனவே லவ குசா என்ற படத்தில் நடித்திருந்ததாலும் ஓபனிங் பிரமாண்டம் ஓ‌ரிரு நாட்களில் குறைந்து போனது. படத்தின் ஹைலைட்களில் ஒன்று இளையராஜாவின் இசை. 


தமிழில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா? 18ஆம் தேதி தெ‌ரிந்துவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget