அதிரடியாக கட்டணத்தை குறைத்த ஐடியா!


3ஜி சேவையின் கட்டண விலையை 70% சதவிகிதம் குறைத்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் கட்டணங்களும், 3ஜி போன்ற தொழில் நுட்பங்களின் விலையும் அதிரடியாக குறைந்து கொண்டே வருவது பற்றி தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது.
ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்கள் 3 பைசாவில் ஐடியாவின் 3ஜி சேவையை 10 கேபி வரை பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பு 10 கேபி வரை 3ஜி சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் 10 பைசா செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இது 3 பைசாவாக குறைந்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஐடியா நிறுவனம் ஹீரோ-25 என்ற புதிய பேக்கேஜை வழங்கி உள்ளது. இந்த ஹீரோ பேக்கேஜின் மூலம் 100 எம்பி வரை 3ஜி சேவையை 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இந்த 100 எம்பி வசதியை 3 நாட்களுக்கு பயன்படுத்த, ரூ.25 கட்டணம் செலுத்தினால் போதும்.
இன்னும் ஒரு சூப்பர் பேக்கேஜையும் ஐடியா வழங்குகிறது. ரூ.10 கட்டணத்தில் 30 நிமிடத்திற்கான 3ஜி சேவையை பயன்படுத்தலாம்.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையின் கட்டணத்தை 70% சதவிகிதம் குறைத்தது. இதை தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது 3ஜி சேவையின் கட்டணத்தினை குறைத்துள்ளது என்று கூறலாம்.
ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வசதிகள் நிச்சயம் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு உபயோகமான ஒன்றாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget