நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா.
சன் டிவியில் தங்கம், தங்கம் என்று ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டுள்ள இந்தத் தொடரை ஆரம்பத்தில் படு சீரியஸாக காட்டி வந்தனர். சீரியஸான முகங்கள், சீரியஸான சண்டைகள், சீரியஸான வசனங்கள் என ஓடிக் கொண்டிருந்தத் தொடரை திடீரென காமெடியாக்கி விட்டனர். வருடக் கணக்கில் இழுக்க வேண்டும் என்றால் இதெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்...
நடிகை காவேரியை வைத்து காமெடித்தனம் செய்து வந்தன நிலையில் இப்போது தொடரை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கே குழப்பமாகியிருக்கும் போல. இதனால் திடீரென ஒரு புதுக் கேரக்டரை புகுத்தி விட்டார். அந்த புது கேரக்டர்தான் சொர்ணமால்யா. இவர் நீண்ட நாட்களாக டிவி பக்கம் காணாமலேயே இருந்து வந்தார். முன்பு சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியை கலக்கலாக கொடுத்து வந்து லைம்லைட்டுக்குப் போனவர் சொர்ணமால்யா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவிக்குள் அவர் காலெடுத்து வைத்துள்ளார்.
சொர்ணாவைக் கூட்டி வந்து நாக கன்னிகை கேரக்டரைக் கொடுத்து நடிக்க வைத்து வருகின்றனர். சொர்ணமால்யாவும் தனது ஸ்டைலில் கலக்கி வருகிறார். இது சிறப்புத் தோற்றம்தானாம். இந்தக் கேரக்டர் முடிவடைந்ததும் மறுபடியும் காவேரியின் அரைவேக்காட்டுக் காமெடியும், பழிவாங்கும் படலங்களும் தொடரும் என்று தெரிகிறது.
இப்படி எதையாவது செய்துதானே சீரியல்களை லென்த்தா இழுத்து ஓட்ட வேண்டியிருக்கு.