சாம் ஆண்டர்சனுக்குப் பின் சினிமாவையும் இணையத்தையும் கலக்கிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், அடுத்து சீஸனுக்கேற்ற சேவை ஒன்றிலும் குதித்துள்ளார். அது, 1000 ரூபாய் தண்ணீர்ப் பந்தல் திறந்து லட்ச ரூபாய்க்கு பப்ளிசிட்டி பார்ப்பது!
இன்று காலை வெள்ளையும் சொள்ளையுமாக கூலர் அணிந்து தன் பாப்புலர் பல் வரிசை தெரிய சிரித்துக் கொண்டே வந்த பவர் ஸ்டார், கோயம்பேடு அருகே ஒரு சின்டெக்ஸ் டேங்க் குழாயைத் திறந்து வைப்பது போல விதவிதமாக போஸ் கொடுத்தார்.
அந்த டேங்கில் பெரிதாக பவர் ஸ்டார் என்று ஸ்டிக்கர் அடிக்கப்பட்டிருந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு பெரிய கூஜா நிறைய ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தார் பவர் ஸ்டார்.
இந்த தண்ணீர் தொட்டி திறப்பு விழாவுக்கு பவர் ஸ்டார் அடுத்து நடிக்கும் மன்னவன் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வந்திருந்து, ''பலம்' காட்டினர்.