தமிழ் சினிமாவில் இப்போதைய முன்னனி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகலப்பு’ என தொடர்ந்து காமெடிகளில் கலக்கிய சந்தானம் அடுத்ததாக நடிக்கும் படம் ‘சேட்டை’.
சேட்டை படத்தில் சந்தானம், ஆர்யா, பிரேம்ஜி இணைந்து நடிப்பதால் இந்த படத்திலும் காமெடிக்கு குறைவிருக்காது. தனது ட்ரீம் ரோல் பற்றி சந்தானம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“ ஒரே படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அந்த கதாபாத்திரங்கள் 1930-ல் இருந்த பெரிய காமெடி நடிகர்களிலிருந்து தற்போதைய முக்கிய காமெடி நடிகர்கள் வரை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக இருக்க வேண்டும்.
அதாவது 30-களில் இருந்த தியாகராஜ பாகவதர், 80-களில் இருந்த கவுண்டமணி, இப்போதைய காமெடியன் நான்” என்று தனது ட்ரீமை கூறியுள்ளார்.