நமிதாவின் முதுகுப்புறம் வரிசையாக பொட்டு வைத்தது போல் பச்சை குத்திய அடையாளம் தெரிகிறது. சமீபமாகதான் இந்த தோற்றம். கவர்ச்சி காட்ட மாட்டேன், நல்ல ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என்று நல்ல ராகு காலம் ஒன்றில் முடிவெடுத்தார் நமிதா. நாம் இல்லாவிட்டால் தமிழ் திரையுலகம் திண்டாடிவிடும் தேடி வந்து ஆராத்தி வைத்து அழைத்து செல்வார்கள் என்று சூரத் பக்கம் தலைமறைவானார். கவர்ச்சி காட்டாத நமிதா நமக்கெதுக்கு என்று சினிமா வேறு பக்கம் நடையைகட்டியது.
நாம் இல்லாவிட்டாலும் சினிமா செழிப்பாக இருக்கும் என்பதை அவர் புரிந்து கொண்ட போது பீப்பாய் அளவுக்கு உடம்பு ஊதிப்போயிருந்தது. கடை திறப்பு விழாக்களுக்கு மட்டுமே ஆஃபர்கள் வந்தன. இந்த பீப்பாய் உடம்பை வைத்துக் கொண்டு, சில்க் வேடத்தில் நடிக்க என்னைவிட்டால் ஆளில்லை என்று பேட்டிவேறு கொடுத்தார். ஐயோ பாவம்.
படம் இல்லையென்றால் பணம் இல்லை என்பதை புரிந்து கொண்டு உடம்பு இளைத்தல், உடற்பயிற்சி, டயட் என்று ஃபுல் கன்ட்ரோலில் இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக ஜோசியரின் அறிவுரைப்படி முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக் குத்திக் கொண்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.