ப்ரணிதாவை தவிக்க வைக்கும் அக்ரிமெண்ட்!


கார்த்தி, ப்ரணிதா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’சகுனி’.  படத்தின் உரிமையாளர்கள் படத்திற்கு சக்சஸ் மீட் வைத்துக்கொண்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு சகுனி வசூல் செய்யவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ப்ரணிதாவிற்கு பாராட்டுக்களும் வாய்ப்புகளும் வந்து குவிகின்றதாம். ப்ரணிதாவுடன் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்தி “ப்ரணிதாகூட நடிச்சது ரொம்ப சௌகரியமா, வசதியா இருந்துச்சு! படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கு!
அவரும் எனக்கு நல்லா ஈடுகொடுத்து நடிச்சிருக்காரு” என்று சில்லுனு சிரிர்த்திருக்கிறார். 


சகுனி படத்தில் நடித்தது பற்றி ப்ரணிதா “ சகுனி படத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. அதற்கு காரணம் ஹீரோ கார்த்தி கொடுத்த ஊக்கமும் ஆதரவும்தான். இயக்குனர் ஷங்கர் தயாளும் தூண்டுகோலாக இருந்து என்னோட திறமைய வெளிப்பட வெச்சாரு. படம் என்னவோ அரசியல் ஆக்‌ஷனா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை தென்றல் வீசுற பூங்காவுல ஜாலியா உலா வந்த மாதிரி தான் இருந்துச்சு” என்று ஜில்லிடுகிறார். 


சகுனியால் ப்ரணிதாவிற்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. “தொடர்ந்து எங்க நிறுவனத்துக்கு மூணு படங்கள் நடிச்சுக் குடுக்குறதா இருந்தா சகுனி நாயகியாகலாம். இல்லனா நாங்க வேற ஹீரோயின பாத்துக்குறோம்” என தயாரிப்பாளர் கே.ஆர்.பிரபு சொல்ல, அவரது டிமாண்டை ஒப்புக்கொண்டு தான் சகுனியில் நாயகியாக நடித்தாராம்(!) ப்ரணிதா. 


சகுனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல ரீச் கிடைத்திருப்பதால் பல படங்களின் கதைகள் ப்ரணிதாவின் கண்களுக்கருகில் வருகிறதான். இருந்தாலும் இந்த மூணு பட அக்ரிமெண்டால் ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் ப்ரணிதா.


 தமிழ் படங்களில் ஒப்புக்கொள்ள முடியாததால் இப்போது ஓரே ஒரு கன்னட படத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கும் ப்ரணிதா ” நம்ம போட்ட அக்ரிமெண்டை பெரிய மனசோட கேன்ஸல் பண்ணுங்க சார். அப்பறமா நீங்க கேட்கும் போதெல்லாம் கால்ஷீட் தர்றேன்” என கெஞ்சலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget