பிரபல நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் நடித்த சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்ற பரபரப்பு தகவல் கோலிவுட்டில் உலவி வருகிறது. ஆனத்த தொல்லை, லத்திகா, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் தற்போது சந்தானத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டதற்கு ''ஆமாம். இந்த தகவல் உண்மைதான். பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் இன்னும் யார் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அனைத்தும் முடிவான பிறகு அறிவிப்பு வெளிவரும். இப்படம் கண்டிப்பாக கலகலப்பான படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்றார்