பில்லா 2 படம் ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டதால், அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தை பற்றிய செய்திகள் ரசிகர்களை பரபரப்பாக்குகின்றன. விஷ்ணுவர்தன் இந்த படத்தை துவங்கும் போதே ஆர்யா, நயன்தாரா என பல முக்கிய நடிகர்களை படத்தில் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பல விபத்துகளில் சிக்கி தனது உடலில் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ள அஜித்துக்கு மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறை கூறியுள்ளனர். ஆனால் அஜித் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ரிஸ்கான காட்சிகளில் நடித்துவருகிறார்.
விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜித் கடந்த ஏழு நாட்களாக தினமும் ஐந்தரை மணிநேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு இருக்க வேண்டுமென்பதற்காக கவனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் அஜித்.
அஜித் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அவரை மேலும் ஸ்டைலாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகளை விஷ்ணுவர்தன் செய்திருக்கிறாராம்.
பில்லா 2 தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக உலகளவில் 1200 திரையில் திரையிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பில்லா 2 படத்தில் ஆறாவதாக ஒரு பாடல் இருக்கிறதாம்.