நடிகை நந்தகி தனது பெயரை மனுமிகா என்று மாற்றிக்கொண்டு விட்டார். இனிமேல் கவர்ச்சிகரமாகவும் நடிக்கப் போவதாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார். முதலில் நந்தகியின் பெயரே கூட ஒரிஜினல் கிடையாது. மாறாக மனோசித்ராதான் அவரது பூர்வீகப் பெயர். அந்தப் பெயரை நந்தகி என்று மாற்றிக் கொண்டு அவள் பெயர் தமிழரசி மூலம் தமிழுக்கு வந்தார். அப்படத்திற்குப் பின்னர் நந்தகிக்கு தமிழில் பெரிய அளவில் பிரேக் கிடைக்கவில்லை.
இதனால் என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த அவருக்கு பெயர் மாற்ற யோசனை பிறந்தது. இதையடுத்து தற்போது தனது பெயரை மனுமிகா என்று மாற்றி விட்டார்.
மேலும், கவர்ச்சி காட்டவும் ரெடி என்றும் அறிக்கை விட்டு விட்டார். இதனால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரும் அறிகுறிகள் தெரிகிறதாம். தற்போது விமலுடன் இணைந்து கூத்து என்ற படத்தில் நடித்து வரும் நந்தகி இதிலும் கூட கிளாமரான சில சீன்களில் நடித்துள்ளாராம். இனிமேலும் கூட அறுவெறுப்பு இல்லாத கவர்ச்சி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ள மனுமிகா, தானே கதைகளைக் கேட்கவும் ஆரம்பித்துள்ளாராம்.