இந்திய ஜனாதிபதிக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள் - சிறப்பு பார்வை


குடியரசுத் தலைவரானதும் பிரணாப்புக்கு கிடைக்கப் போகும் சலுகைகளின் பட்டியலை தயாரித்து மீடியாவிற்கு கை வலி கண்டதுதான் மிச்சம். இதில், முக்கியமானது அவர் வசிக்கப் போகும் அதிகாரப் பூர்வமான இல்லமான குடியரசுத் தலைவர் மாளிகை.
அடுத்து அவரது கார்.
ஆம், இதுநாள் வரை அம்பாசடர் காரில் விரைந்து விரைந்து சென்று வேலை பார்த்த பிரணாப் இனி கஸ்டமைஸ் செய்யப்பட்ட பென்ஸ் காரில்தான் வலம் வரப் போகிறார். இனி பாதி வேலையை காரிலேயே முடிக்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட 12 கோடி மதிப்புடைய இந்த கார் கடந்த ஆண்டுதான் வாங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்காக ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. ஆனால், அவர் வெறும் 8 மாதங்களே பயன்படுத்திய நிலையில், தற்போது அந்த கார் பிரணாப் வசமாகிறது.
கடந்த ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பயன்படுத்தி வந்தார். அந்த கார் அதற்கு முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் பதவி வகித்தபோது வாங்கப்பட்டது.
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய லிமோசின் ரக காரை ஜனாதிபதி மாளிகை வாங்கியது. அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் பயன்படுத்தும் லிமோசின் ரகத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பயன்படுத்தும் வகையில், லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் கூட இந்த கார் சேதமடையாது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் விஷேச புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.
பஞ்சரானால் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.





இதில், தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரைவிட 115 செமீ கூடுதல் நீளம் கொண்ட வீல் பேஸ் கொண்டிருப்பதால் உள்பக்கம் தாராளமான இடவசதியை இந்த கார் கொண்டிருக்கிறது. அதாவது, ஓர் விசாலமான அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும்.
மேலும், அவசர காலத்தில் சிறிய கூட்டம் மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக தொலைதொடர்பு வசதிகள் கொண்டதாக இருக்கிறது. மேலும், பொழுதுபோக்குக்காக டிவி உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. சிறப்பு ஏர்இன்டேக் சிஸ்டம் மூலம் அசுத்த காற்றை சுத்திகரித்து காருக்கு வெளியில் அனுப்பும் வசதியும் இருக்கிறது.
இந்த காரில் 5513 சிசி திறன் கொண்ட (5.5 லிட்டர்) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 517 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். ஏதெனும், அவசரம் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் சிட்டாய் பறந்துவிடும் ஆற்றல் படைத்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை ஓர் ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு வடிவமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget