தமன்னா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என்றால் தமன்னா. இப்படிதான் தமிழ் ரசிகன் புரிந்து வைத்திருக்கிறான். இவனே இப்படி என்றால் ஆந்திரா ரசிகன்? அவர்களுக்கு காரத்தைப் போல கவர்ச்சியும் தூக்கலாக வேண்டும். ஆனால் தமன்னாவின் அடுத்தப்படம் குறித்த செய்திகள் அத்தனை கவர்ச்சியாக இல்லை. அடுத்து பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. கப்பார் சிங்குக்குப் பிறகு பவன் நடிக்கும் படம் என்பதால் அறிவிப்பு வந்த உடனே ஸ்கூப் தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அதிலும் தமன்னா குறித்து எக்கச்சக்க தகவல்கள். இந்தப் படத்தில் பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்கிறார் தமன்னா. மற்ற வேடங்களாக இருந்தால் குட்டைப் பாவடை கொடுக்கலாம். ரிப்போர்ட்டருக்கு? படம் நெடுக இழுத்துப் போர்த்திய காஸ்ட்யூம்கள்.கனவுக்காட்சியிலாவது தமன்னா தாராளத்தை கடைபிடிப்பாரா என்பது இயக்குனரின் கையில். திடீரென்று தமன்னா கவர்ச்சிக்கு புறமுதுகு காட்டியது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.