ரவி தேஜா, டாப்சி தெலுங்கில் நடித்த ‘தருவு’ படம் தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் வருகிறது. பிரபு, பிரம்மா நந்தம், ஜெயசுதா, சுஷாந்த்சிங், ஷாயாஜி ஷிண்டே, அவினாஷ், ரகுபாபு ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். புல்லட் ராஜா நல்ல மனம் கொண்ட சிறிய ரவுடி. ஸ்வேதா மேல் காதல் வயப்படுகிறான். அவளுக்கோ இன்னொரு பெரிய ரவுடியான ஹார்டர் பாபுவுடன் நிச்சயம் நடக்கிறது. அவன் திட்டமிட்டு புல்லட் ராஜாவை கொல்கிறான்.
எமலோகம் செல்லும் புல்லட் ராஜா தனக்கு அநீதி வழங்கப்பட்டதாக உணர்கிறான். வேறு வழியின்றி எமன் வில்லன்களால் கொல்லப்படும் உள்துறை மந்திரி உடலில் புல்லட் ராஜாவின் உயிரை செலுத்துகிறார். மந்திரி உடல் மூலம் புல்லட் ராஜா எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவது கிளைமாக்ஸ். அடுத்த மாதம் தமிழகமெங்கும் இப்படம் ரிலீசாகிறது.