தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் வகையில் குடிசைப் பகுதியிலிருந்து இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார் முன்னணி நடிகை ஹன்ஸிகா. நடிகை ஹன்ஸிகாவுக்கு இன்று பிறந்த நாள். பொதுவாக பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள் நடிகர் நடிகைகள்.
ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.
இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்ஸிகாதான் செய்யப் போகிறாராம்.
மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் போகிறாராம்.
அழகு என்பது வெறும் புறத் தோற்றத்தில் மட்டும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹன்ஸி.
பிறந்தநாள் வாழ்த்துகள்!