நந்து சினி ஆர்ட்ஸ் சார்பில் திருச்சி ஜி.செல்லத்துரை கதை, திரைக்கதை, எழுதி தயாரிக்கும்படம் ‘இது சாருவோட டேட்டிங்’. இதில் நாயகனாக கிரிஷ், நாயகியாக ஸ்வப்னா அறிமுகமாகின்றனர். ஜி.எம்.குமார், பாவனா, ஸ்ரீரேகா, சசி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிககின்றனர். இப்படத்தை எஸ்.நாகராஜன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். படித்து ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிவோர் மத்தியில் டேட்டிங் கலாசாரம் பரவி வருகிறது. இது நம் பண்பாட்டு கலாசார சூழலுக்கு முரணானது. அதை மையப்படுத்தி இப்படம் தயாராகிறது.
நாயகியை, நாயகன் டேட்டிங்குக்காக வார கடைசிநாளில் புதுச்சேரி அழைத்து செல்கிறான். அங்கு இருவரும் சமூகவிரோத கும்பலிடம் சிக்குகின்றனர். அவர்களிடம் இருந்து எப்படி தப்புகிறார்கள் என்பது கதை.
காலை தொடங்கி மறுநாள் காலை வரை 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களுடன் பரபரப்பும், விறுவிறுப்புமாக படமாகிறது. டேட்டிங்கால் ஏற்படும் ஆபத்துகளும் விபரீதங்களும் காட்சிபடுத்தப்படுகிறது. இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் எச்சரிக்கை படமாக இருக்கும். சென்னை, புதுவை, கடலூரில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இசை: சி.ஜார்ஜ், எடிட்டிங்: சதீஷ், பி.கோட்டாய், ஸ்டண்ட்: சைதை குணா, ஒளிப்பதிவு: என்.எஸ்.ஜெகதீஸ், எம்.சி.காளிதாஸ்.