கருத்தமச்சான் திரை முன்னோட்டம்

தி பட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.என். கிறிஸ்துராஜன், ஏ.எம்.ஆனந்தன் ஆகியோர் தயாரிக்கும் படம் எகருத்த மச்சான். இதில் நாயகனாக ஜெயகாந்த் அறிமுகமாகிறார். நாயகியாக ஷாசனா நடிக்கிறார். மேலும் பல புதுமுகங்கள் நடிக்கின்றனர். இப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி ஜி.ஆர்.ஜெயகாந்த் இயக்குகிறார். காதல் கதையாக தயாராகிறது. இப்படத்துக்காக வினோத் எழுதிய என்உயிரில் உயிராய் வந்தாய் என் கண்ணில் பூவாய் நின்றாய் நெஞ்சில் மழையாய் வருவாய் என்ற பாடல் காட்சி சரண்பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது.
ஊட்டி, கூடலூர் பகுதிகளில் பாடல் காட்சிகள் படமாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்தது. பின்னணி இசை சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும். ஒளிப்பதிவு: குமரன், எடிட்டிங்: சுரேஷ்ராஜன், ஸ்டண்ட்: மிரட்டல் செல்வம், நடனம்: பவர்சிவா. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget