5. பொல்லாங்கு
இந்த த்ரில்லர் படம் இந்த வாரம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் - அதாவது முதல் மூன்று நாள் வசூல் 2.53 லட்சங்கள்.
4. சகுனி
ஆறு வாரங்கள் முடிவில் சகுனி சென்னையில் 7.1 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 89 ஆயிரங்கள் மட்டுமே. வார நாட்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது.
3. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் சென்னையில் 6.5 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2. நான் ஈ
இந்த வாரம் நான் ஈ-க்கு அதே இரண்டாவது இடம். சென்ற வார இறுதியில் இப்படம் 65 லட்சங்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இப்படம் வெளியான பிறகு இதுவே அதிகபட்ச வீக் எண்ட் கலெக்சன். இதுவரை 4 கோடிகளை இப்படம் சென்னையில் வசூலித்துள்ளது.
1. பில்லா 2
அதே முதலிடத்தில் இருந்தாலும் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 72.5 லட்சங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 7.5 கோடிகளை வசூலித்துள்ளது. இது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பாதி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.