இயங்குதள வடிவமைப்பில் முடிசூடா மன்னனாகத் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8 இயங்குதளம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, 90 நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய சோதனை பதிப்பை (trial version) வெளியிட்டுள்ளது. மெட்ரோ இடைமுகம் உட்பட பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 8 ஆனது 32-bit , 64-bit ஆகிய பதிப்புக்களின் அடிப்படையில் காணப்படுகின்றது. விண்டோஸ்
பயனர்கள் மத்தியில் இந்த இயங்குதளத்திற்கு ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்பு நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது.