சன் டிவியில் சொந்த பந்தம் ஜீ தமிழ் டிவியில் துளசி என அமைதியான கதாபாத்திரத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளார் சந்திரா லட்சுமணன். மலையாள திரை உலகில்தான் அறிமுகம் என்றாலும் தமிழில் கோலங்கள் தொடரில் போல்டான பெண்ணாக வந்து யார் இவர் என்று கேட்க வைத்தவர். சின்னத்திரை மட்டுமல்ல சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும்
அவர் தன்னுடைய திரை உலக பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நான் திரைத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் மலையாள படங்கள் , தொடர்கள் நடித்துக்கொண்டிருந்தேன். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் இன்டஸ்ட்ரியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எங்க அப்பா இந்துஸ்தான் லீவரில் ஓர்க் பண்ணினார்,அம்மா பேங்க்ல ஓர்க் பண்றாங்க.என்னோட கூட பிறந்தவங்க யாரும் இல்லை நான் ஒரே பெண். ஓட்டல் மேனேஜ்மண்ட் படிச்சிருக்கேன். இரண்டரை வயதில் இருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டடேன். பத்தாவது படிக்கும் போதே நிறுத்திவிட்டேன். அரங்கேற்றம் பண்ணவில்லையேன்றாலும். அதை விட அதிகமமா கற்றக்கொண்டேன். என்னோட முதல் டான்ஸ் குரு சாந்தி கிருஷ்ணா.
நான் திரைத்துறைக்கு வந்தது விபத்துதான். பார்க் ஷர்டன் ஓட்டல்ல டிரையினிங்ல இருந்தப்ப சினிமா தொடர்புடைய யாரோ என்னை பார்த்து விட்டு நடிக்க அழைத்தார்கள். எனக்கு பிலிம் பேக் ரவுண்ட் கிடையாது. யார்கிட்ட கேட்பதுனு தெரியல அதனால சாமி முன்னாடி சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்தோம். அதில் முன்று முறையும் நடிகைன்னு தான் வந்தது. பிறகு தான் இந்த பீல்டுக்கு வந்தேன்.
மலையாளத்திலும் சீரியல் நிறைய நடித்திருக்கிறேன். அங்கே ஒரு படத்தோட செட்டப் எப்படியிருக்குமோ அந்த செட்டப் இங்கே சீரியலுக்கே இருக்கும். அங்கே படத்திற்கு இருக்கும் பிரமாண்டம் இங்கே சீரியல்ல இருக்கும். நிறைய வித்தியாசம் இருக்கு. தமிழ் இண்டஸ்ட்ரி பெரிய இன்டஸ்ட்ரி . இங்கே டெக்னீக்கல இருந்து எல்லாவற்றிலும் ரொம்ப அட்வான்ஸா இருக்கும். இங்கே நிறைய டைம் கிடைக்கும். அங்கே கால்ஷிட் எல்லாம் கிடையாது. இரவு ஒன்பதரை,பத்துவரைக்கும் ஓர்க் பண்ண வேண்டியிருக்கும். இங்கே கால்ஷிட் வைத்து ஓர்க் பண்றது ரொம்ப காம்பட்டபுளா இருக்கு.
நான் நடித்ததில் கோலங்கள், வசந்தம், காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களில் கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது. இப்போ கூட நிறைய பேர் என்னிடம் காதலிக்க நேரமில்லை தொடர் பற்றிதான் ரொம்ப விசாரிப்பார்கள். ஒரு தொடருக்காக சிங்கப்பூர் வரை போனதே மறக்க முடியாத அனுபவம் தான். அந்த தொடருக்காக என்சொந்த குரலில் டப் செய்ததும், முதன் முறையா என்குரலை ஸ்கீரின்ல கேட்டதும் மறக்கவே முடியாது.
நாங்கள் கேரளாவில் இருந்த தமிழ் பிராமின் என்பதால வீட்டில் பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்கும். எப்பவுமே ஆத்துக்கு போறேன், போய்ன்றிருக்கேன்.இப்படி தான் வரும் ஆனால் அந்த தொடரில் தேவர் பொண்ணு கேரக்டர். அந்த பேச்சே வேற மாதிரி இருக்கனும். அடிக்கடி பேசும் போது என் தமிழ் வந்திடும். பிரஜன் மலையாளி ஆனா அவர் மலையாளத்தை விட தமிழ் தான் நல்லா பேசுவார். அதே மாதிரி அந்த தொடரின் டைரக்டரும் ஒரு மலையாளி நான் பேசும் போது தப்பு வந்தா சரியா கண்டு பிடிச்சிடுவார். இப்போ இந்தளவுக்கு தமிழ் பேசுறேன்னா அது அந்த தொடர் முலமா தான்.
தமிழ் படங்களில் நடிப்பதற்கு நிறைய ஆசையிருக்கிறது. ஆனால் லீட் ரோல் தான் பண்ணுவேன் கிடையாது. ஒரு படத்தில் நடித்தால் அதில் என்னை ஆடியன்ஸ் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி ரோல்ஸ் பண்ணனும். கிளமர் எல்லாம் ஒரளவுக்கு தான் பண்ணுவேன். சினேகா பண்றளவுக்கு தான் எனக்கு இன்ட்ரஸ்ட்.
ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப செல்க்டீவ்வான கேரக்டர்ஸ் தான் நான் பண்றேன். ஒரு எக்ஸ்பிரிமண்ட்டான கேரக்டரா இருக்கனும். அதே மாதிரி எல்லாவிதமான கேரக்டரும் பண்ணனும். அப்போ தான் ஒரு ஆர்டிஸ்ட்டா கம்ப்ளிட் ஆவதாக அர்த்தம். சினிமா சீரியல்ன்னு வித்ததியாசம் எதுவும் நான் பார்க்கவில்லை. என்ன கேரக்டர் பண்றேன் என்பது தான் முக்கியம். இப்பொழுது சன் டிவியில் ‘சொந்த பந்தம்' நடித்துக்கொண்டிருக்கிறேன். கிராமத்துப் பெண் கதாபாத்திரம். ஜீ தமிழில் ‘துளசி' லீட் ரோல் நான்தான் என்பதால் என் கதாபாத்திரம் பேசும் படியாக அமைந்திருக்கிறது.
நான் நடித்து வரும் பாத்திரங்கள் சின்னதாக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரியான பாத்திரங்களில் தான் நடித்து வருகிறேன். இது மாதிரியான வேடங்கள் வந்தால் தொடர்ந்து சினிமாவிலும் நடிப்பேன்'' என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானார் சந்திரா லட்சுமணன்.