சர்வதேச சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் எத்தகைய வரவேற்பினை கொண்டுள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனால் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஐபோன்களில் தமிழ் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த முடியுமா? என்று ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆப்பிள் ஐபோனில் தமிழ் மொழியில் வசதிகளை எளிதாக பெறலாம்.
இதற்கு நிறைய அப்ளிக்கேஷன்களும் இருக்கிறது.
தழிழ் ரேடியோ & நியூஸ்:
தழிழ் ரேடியோ & நியூஸ் என்ற அப்ளிக்கேஷனில் 30 ரேடியோ ஸ்டேஷன்களை துல்லியமாக கேட்டக முடியும். அதுவும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் கேட்க முடியும். இந்த அப்ளிக்கேஷனை எளிதாக ஐபோனில் டவுன்லோடு செய்யலாம்.
தமிழ் காலண்டர்:
தினசரிகளை தமிழ் மொழியில் எங்கிருந்தாலும் ஐபோன் அப்ளிக்கேஷன் மூலம் பார்க்கலாம். தமிழ் காலண்டர் என்ற இந்த ஐபோன் அப்ளிக்கேஷன் மூலம் அந்தந்த ஆண்டுக்கான தினசரிகளை எளிதாக பார்க்கலாம்.
டெய்லி நியூஸ்:
தினமும் செய்தி தாள்களை தமிழில், இருக்கும் இடத்தில் இருந்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? ஐபோனில் உள்ள ஆயிரமாயிரம் அப்ளிக்கேஷன்கள் அதற்கும் கதவு திறக்கிறது. ஐடியூன்ஸில் உள்ள தமிழ் டெய்லி நியூஸ் அப்ளிக்கேஷன் மூலம் சுலபமாக அன்றைய செய்திகளை படிக்கலாம்.
பெமினா தமிழ் அப்ளிக்கேஷன்:
பெண்களுக்கான பிரத்தியேகமான தகவல்களை வழங்கும் ஃபெமினா புத்தகத்தை தமிழில் எளிதாக படிக்கலாம். பெமினா மாத இதழை ஐபோனில் உள்ள பெமினா தமிழ் அப்ளிக்கேஷன் மூலம் படிக்கலாம். இந்த அப்ளிக்கேஷன் ஜூலை பத்தாம் தேதி தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது இன்னும் ஒரு கூடுதல் தகவல்.
தமிழ்-10:
விரும்பிய பாடல்களை ப்ளே செய்து கேட்க வேண்டும் என்றால், ஆப்பிள் ஐபோனில் அதற்கும் அப்ளிக்கேஷன்கள் இருக்கிறது. தமிழ்-10 என்ற அப்ளிக்கேஷன் மூலம் விருப்பமான பாடல்களை, விரும்பிய போதெல்லாம் கேட்டு மகிழலாம்.