இனி நாம் சாட் ஆப்ஷனில் இருப்பதை விருப்பப்பட்ட நபருக்கு மட்டும் தெரியப்படுத்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். சில சமயங்களில் நாம் பேச விருப்பப்படாத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனால் சாட்டில் இருக்கிறோம் என்பதை நாம் விரும்பிய நபர் மட்டும் தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் வழங்கும் புதிய வசதியினை எப்படி பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
முதலில் சாட் பாப் அப் பாக்ஸின்
மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற வசதியினை பார்க்கலாம். இந்த செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் டர்ன் ஆன் சாட் ஃபார் ஒன்லி சம் ஃப்ரென்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும். கீழே கேன்சல் மற்றும் சேவ் என்ற ஆப்ஷனும் இருக்கும். இதில் சேவ் வசதியை பயன்படுத்தி சேவ் செய்ய வேண்டும். அவ்வளவு தான், இனி குறிப்பிட்டவர்களுடன் மட்டும் அழகாக சாட் செய்யலாம்.
இப்படி செய்த பிறகு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் உள்ளவர்கள் மட்டும் தான், நாம் சாட்டில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியின் மூலம் விருப்பமில்லாத நபர்களுடன் உறையாடுவதை எளிதாக தவிர்த்து கொள்ளலாம்.
பாதுகாப்பாக சாட் செய்ய சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் வழங்கும் இந்த புதிய வசதி, நிச்சயம் ஃபேஸ்புக் உறுப்பினர்களுக்கு சிறப்பாக பயன்படும்.