வெள்ளி திரையில் மறு அவதாரம் நாயகி தேவயானி!


இனியா, பிரியங்கா என இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மாவான பின்னும் சீரியல்களில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் தேவையானி. சன் டிவியின் முத்தாரம் தொடரில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் கணவர் ராஜகுமாரன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் "திருமதி தமிழ்' படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தன்னுடைய இந்த திடீர் மாற்றம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் தேவயானி.
சினிமாவில் தேவயானிக்கு என தனி முத்திரை இருந்தது. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது சீரியல்தான். என்னுடைய முதல் சீரியல் "கோலங்கள்' பெரிய ஹிட். நான்கு ஆண்டுகளுக்கு மேல் அந்த சீரியல் ஓடாதே வீடே இல்லை. அதைப் பார்க்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அது ரீச் கொடுத்தது.
இப்போது "முத்தாரம்' சீரியலில் பரபரக்கும் போலீஸ் வேடம். என்னால் இப்படி நடிக்க முடியுமா என்று எனக்கே ஆச்சரியம். "காக்க காக்க' சூர்யா, "சாமி' விக்ரம் போல் "முத்தாரம்' ரஞ்சனி தேவி கேரக்டரும் டி.வி. ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்த இடம், அது தந்த உயரம் எல்லாமே ஆச்சரியம்தான். சீரியல் எனக்கு கிடைத்த வரம். அதை தந்த கடவுளுக்கு நன்றி.
சினிமாவை விட சீரியல்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. முழுமையான ஒரு நடிகையாக என்னை நானே உணர்ந்தது இங்கேதான். எனக்கு சீரியல்களை தவிர்த்து எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை. அந்த சமயத்தில்தான் என் கணவர் ராஜகுமரான் ஒரு கதை சொன்னார். நல்ல கதை நாமே தயாரிக்கலாம் நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று சொன்னேன். புதுமுகம் தேடும் போது சிக்கல் எழுந்ததால் நானே நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் எதார்த்த கதைகளும், எதார்த்த முகங்களும்தான் இப்போது ஜெயிக்கின்றன. அதனால் எங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழ் சினிமாவில் முன்பு எனக்கு ஜோதிகாவை பிடித்திருந்தது. சமீபத்தில் தமன்னா பிடிக்கும். அவ்வளவுதான். வேறு சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. இப்போது எனக்கு சினிமா பார்க்க நேரம் கிடைப்பதில்லை. இப்பொழுது சீரியலுக்கே நேரம் சரியாக இருக்கிறது. மீதம் இருக்கும் நேரங்களை குழந்தைகளோடு செலவிடுகிறேன் என்று கூறிவிட்டு குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடப்போனார் தேவயானி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget