ஹன்சிகா தன் பெயரில் டுவிட்டர் அக்கவுண்டை தொடங்கி அதன் மூலம் தனது ரசிகர்களுக்கு தினமும் தத்துவங்களை அள்ளி வீசி வந்தார். வெறுப்படைந்த யாரோ ஒரு மர்மநபர் தன் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி அந்த டுவிட்டரையே முடக்கி விட்டார். அதனால் மனம்நொந்த ஹன்சிகா மெயிலில் தன் ஃபீலிங்கை கொட்ட மனமிரங்கிய அந்த மர்மநபர் டு-விட்டரை செயல்பட விட்டுவிட்டார். மீண்டும் சந்தோஷம் அடைந்திருக்கும் ஹன்சிகா. தன் டுவிட்டரை முடக்கியது
தனது தொழில் எதிரிகள்தான் என்றும். இது தனக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் நண்பர்களிடம் புலம்பி வருகிறார். இதனால் எல்லாம் ஹன்சியின் வளர்ச்சியை தடைசெய்து விட முடியமா? என்ன?