WinMend Auto Shutdown - தானியங்கி கணினி நிறுத்த மென்பொருள் 1.3.4


நாம் கணணியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஏதாவது அவசர வேலையாக கணணியை ஷெட்டவுண் செய்திட மறந்து விடலாம். அம் மாதிரியான நேரத்தில் இந்த குறையை நிவரத்தி செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது. இது குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கணணி தானாகவே நின்று விட உதவுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் Shut Down, Log Off, Stand by, Hibernate என பல ரேடியோ பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் தேவையானதை தெரிவு செய்யவும், அடுத்தது எந்த நேரத்தில் கணணி நின்று விட வேண்டும் என நினைக்கின்றோமோ அந்த நேரத்தை தெரிவு செய்யவும். குறிப்பிட்ட நாளில் குறிபிட்ட நேரத்தில் நின்று விட வேண்டுமா அதனையும் நாம் தெரிவு செய்யலாம். இவை அனைத்தையும் தெரிவு செய்து பின்னர் இதில் உள்ள Start task கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி நீங்கள் மற்ற பணிகளை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் உங்கள் கணணி தானாகவே நின்றுவிடும். இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.12MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget