வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.‘வேட்டை மன்னன்', ‘போடா போடி' என பிஸியாக இருக்கும் சிம்பு, வாலு படத்தை அவ்வப்போது கவனிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவும், காமெடியன் சந்தானமும் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிம்பு இறுதியாக நடித்த ‘ஒஸ்தி' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், 'வாலு' மற்றும் 'போடா போடி' போன்ற படங்களை வெற்றிப் பாடமாக்கியே தீருவேன் என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போடா போடி திரைப்படம் இப்பொழுதுதான் வேகம் எடுத்துள்ளது. இதன் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
‘வாலு' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார். எனவே ‘வாலு' திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ‘வாலு' படப்பிடிப்பில் வந்து வந்து நடித்து தரவேண்டும் என்று சிம்பு ஒப்பந்தம் போட்டுள்ளதால் செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.