சிம்புவும், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இணைந்து நடிக்கும் படம் போடா போடி. கன்னியமான இந்த தலைப்புள்ள படம் கடந்த சில வருடங்களாகவே கிடப்பில் கிடந்தது. சிம்பு இந்தப் படத்தை விட்டுவிட்டு வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பாவம் சரத்குமார் மகள் சிம்புவுக்காக வெயிட் பண்ணியே நொந்து போனார். வெறுத்துப்போன வரலட்சுமி தந்தையிடம் சொல்லி வருத்தப்பட. சரத்குமார் சிம்புவிடம் கொஞ்சம் இன்னொரு முகம் காட்ட இப்போதுதான் போடா போடி பக்கம் வந்திருக்கிறார் சிம்பு.
படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில்தான் படமாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ்சிவன் என்ற புதுமுகம் இயக்குகிறார். தரண்குமார் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். ஒருவழியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அதுவும் ஒரு பாடல்தான் இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் "லவ் பண்ணலாமா? வேண்டாமா" என்ற தத்துவ பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இந்தப் பாடலை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நாட்கள் சென்ற பின் மொத்த பாடலையும் வெளியிடுவார்களாம்.