பள்ளி மாணவன் வேடத்தில் பட படக்க வரும் தனுஸ்


பள்ளி மாணவன் வேடம் என்றால் தனுஷ்க்கு அல்வா சாப்பிடுவது போலாகிவிட்டது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 3 போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தியில் முதன் முதலாக நடிக்கும் ராஞ்சனா திரைப்படத்திலும் பள்ளி மாணவன் கதாபாத்திரம் தனுஷ்க்கு கிடைத்துள்ளது. ராஞ்சனா திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் இயக்குகிறார். தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு காசியில் நடைபெற்றது.
காசி மக்கள் கூட்டம் நிறைந்த நகரம். இங்கு படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியம்தான். ஆனால் கதாநாயகன் தனுசும், நாயகி சோனமும் பள்ளி மாணவர்கள் வேடத்தில் இருந்ததால் யாராலும் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து கூறிய இயக்குநர், படப்பிடிப்பின் போது பள்ளிச் சீருடையில் இருந்த தனுஷ், சோனம் கபூர் ஆகியோரை கூட்டத்தினரால் அடையாளம் காண முடியவில்லை. இருவரையும் இச்சீருடையில் பார்க்கையில் மிகவும் இளமையாக இருந்தனர். இதனை நாம் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இப்படம் காதலின் பின்னணியில் உருவாகி வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 17 வயது பள்ளி மாணவர்களாக நடிக்கும் தனுசுக்கு 29 வயதாகிறது. கதாநாயகி சோனம் கபூருக்கு 27 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget