சுந்தரபாண்டியனில் சசிகுமார் ரஜினியை இமிடேட் செய்து ஓடிஓடி ஆடுவது, கிழவிகளை கொஞ்சுவது என்று அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு அடிபோட்டிருக்கிறார். இப்படியே தொடர்ந்தால் அடுத்த விஜய டிஆர் டைட்டிலை கைப்பற்றலாம். சுப்பிரமணியபுரம் சிறந்த படம்தான். அதுக்காக சசிகுமார் நடித்த படத்தையெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ரொம்ப ஓவர். சுந்தரபாண்டியனை யுகே-யில் வெளியிட்டனர். வெளியான முதல் மூன்று நாட்களில் வெறும் மூன்றே காட்சிகள். கலெக்சன் ஒரு லட்சத்துக்கு
ஐந்தாயிரம் குறைவு. ட்ரான்ஸ்போர்ட் செலவுக்கு கிடைத்திருக்கிறது.
யுஎஸ்-ஸில் முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 2.38 லட்சங்கள் வசூலித்துள்ளது. யுகே வசூலுக்கு இது எவ்வளவோ மேல்.
முகமூடி யுகே-யில் மூன்றாவது வார இறுதியில் 2 திரையிடல்களில் 51 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரை இதன் வசூல் 30.77 லட்சங்கள். யுஎஸ்-ஸில் இதுவரை 53 லட்சங்களுக்கு மேல் வசூலித்துள்ளது.
பாண்டியனுக்கு முகமூடி பரவாயில்லை.