இந்தியாவில் மின்னல் வேக ப்ராட் பேண்ட் சேவை வருகிறது


இந்தியாவி்ல் இணைய தளத்தின் பயன்பாடு தற்போது அதிகரித்திருக்கிறது. அதனால் அதற்கேற்ற வேகமான இணைய தள தொடர்பும் தேவையாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது ப்ராட் பேண்ட் வசதியை வைத்திருப்போர் வரும் 2013ல் மிக வேகமான சேவையைப் பெறமுடியும். அதாவது ப்ராட் பேண்டை இணைப்பை வைத்திருப்போர் இந்தியாவில் உள்ள 9 முக்கிய மாநகரங்களில் வரும் 2013ன்
மத்தியில் ஒரு வினாடிக்கு ஒரு ஜிகாபிட் வீதம் பதிவிறக்கும் செய்யும் அல்ட்ரா பாஸ்ட் சேவையைப் பெற முடியும்.
இதனை ரேடியஸ் இன்ப்ராடெல் என்று தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த சேவை இன்னும் 6 முதல் 9 மாதங்களுக்குள் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று தெரிகிறது. இதன் மூலம் 2 மணி நேரம் ஓடக்கூடிய எச்டி திரைப்படத்தை 30 வினாடிகளில் பதிவிறக்கும் செய்ய முடியும் என்று ரேடியசின் தலைமை மேலாளர் ரஜ்னிஸ் வைய் கூறியிருக்கிறார்.
ஆனால் சாதரண இணைப்பில் இந்த பதிவிறக்கத்தைச் செய்ய ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்த புதிய சேவை இந்தியாவை தகவல் தொடர்புத் துறையில் இன்னும் ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget