ஜீவா நடிக்கும் ‘யான்' படத்தில் கடல் கதாநாயகி துளசி ஜோடி சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கார்த்திக் மகன் கவுதமும், ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் நடித்து வருகின்றனர். திரை உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை வெளியிடுவதற்குக் கூட மணிரத்னம் தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில் துளசி அடுத்ததாக ஜீவா உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'யான்' திரைப்படத்தை ஆஸ்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களை தயாரித்த இந்நிறுவனம் ஜீவாவின் அடுத்த படத்தை தயாரிக்கின்றனர். ‘யான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. கடல் படத்தில் துளசி பிஸியாக இருப்பதால் அது முடிந்த உடன் யான் படத்தில் துளசி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவோ கோ படத்தில் கார்த்திகாவுடன் இணைந்து நடித்தார் ஜீவா. ராதாவின் மூத்த மகள்தான் கார்த்திகா. இந்த நிலையில் அடுத்து கார்த்திகாவின் தங்கச்சியுடன் இணையப் போகிறார் ஜீவா. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்கா, தங்கச்சி நடிகைகளுடன் இணையும் நடிகர் என்ற பெயர் ஜீவாவுக்கு கிடைக்கவுள்ளது.
ஒரு காலத்தில் ராதாவும், அவரது அக்கா அம்பிகாவும் இணைந்து தமிழ் ஹீரோக்களை கலக்கி வந்தனர். ரஜினி, கமல் உள்ளிட்டோர் இவர்கள் இருவருடனும் மாறி மாறி நடித்துள்ளனர். மேலும் ஒரே படத்தில் இந்த இரு ஹீரோயின்களுடனும் இணைந்தும் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
பூங்காற்று திரும்புதோ....??