பொதுவாக பாடல் காட்சிகளில் அல்லது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் ஹீரோவுடன் முத்தம் கொடுத்தபடி நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சொன்னாலே ரொம்பவே அலட்டிக்கொள்வார்கள் நடிகைகள். ஆனால் நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு-சுனைனா இருவரும் ஒரேயொரு பாடலில் ஏராளமான முத்தங்களை
கொடுத்தபடி நடித்திருப்பதை அடுத்து முத்தம் கொடுத்து நடிப்பது கோடம்பாக்கத்தில் சாதாரண விஷயமாகி விட்டது. அதனால் இதுவரை முத்தக்காட்சி என்றாலே, வெடிகுண்டு சமாச்சாரம் போல் அறிய வந்த அஞ்சலியும் இப்போது மாறத் தொடங்கி விட்டார். ஆர்யாவுடன் நடித்து வரும் சேட்டை படத்தில் அப்படியொரு காட்சி உள்ளது என்று முதலில் இயக்குனர் கண்ணன் சொன்னபோது மறுத்த அஞ்சலி, இப்போது அந்த காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம். இதனால் ஏற்கனவே அதே படத்துக்காக ஹன்சிகாவுடன் கிளுகிளுப்பான முத்தக்காட்சியில் நடித்து விட்ட ஆர்யா, இப்போது அஞ்சலியின் சூடான முதல் முத்தத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.