பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு, எந்த படத்திலும் நடிக்கவில்லை பிரசாந்த். கதை சொல்ல சென்ற சில இயக்குனர்களிடம், "அடுத்து ஒரு மெகா படத்தில் நடிக்கப் போகிறேன். அதையடுத்து உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாராம். அது என்ன மெகா படம் என்று விசாரித்த போது, இந்தியில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை, தமிழில் "ரீ-மேக் செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படத்திற்காக, இப்போதே ஒத்திகையில் ஈடுபட்டுள்ளாராம்
பிரசாந்த். மேலும், அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ள அப்படத்தை, ஷங்கர் அல்லது கவுதம் மேனன் போன்ற முன்னணி இயக்குனர்கள் யாரேனும் இயக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாந்த். மேலும், அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ள அப்படத்தை, ஷங்கர் அல்லது கவுதம் மேனன் போன்ற முன்னணி இயக்குனர்கள் யாரேனும் இயக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.