Dont Panic! - கணினியில் ஆட்டம் காட்டும் மென்பொருள்


தாங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் பொது பல நேரம் கணினி முன் அமர்ந்து game விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அல்லது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். திடிரென உங்கள் மேலதிகார் வருகிறார். உடனடியாக என்ன செய்வீர்கள்? சம்பந்தபடாத அனைத்து விண்டோக்களையும் மூட வேண்டும். சம்பந்தப்பட்ட கோப்புகளை திறக்க வேண்டும். இவையனைத்தும் ஓரிரு வினாடிகளில் நடைபெற வேண்டும்.
இல்லையென்றால் மானிட்டரை கவிழ்த்து வைக்க வேண்டியதுதான். அதற்கு தீர்வாகதான் இந்த மென்பொருள். இதை உங்கள் கணினியில் இதனை நிறுவியபிறகு, இது விண்டோஸ் உடன் துவங்க வேண்டுமா என்பதையும் துவங்கும் பொழுது Panic mode -இல் துவங்க வேண்டுமா என்பதையும் Options பகுதிக்கு சென்று General tab இல் தேர்வு செய்து கொள்ளுங்கள். 

மேலும் இதன் Other actions பகுதியில், நீங்கள் சற்றுமுன் பயன்படுத்திய Recent Files Folders, Browsing history, typed url, cache, cookies, recycle bin என எதுவெல்லாம் க்ளின் செய்யப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்து Close (hide) டேபிற்கு சென்று Add பொத்தானை க்ளிக் செய்து எந்தெந்த அப்பிகேஷன்களை மூடவோ அல்லது மறைக்கவோ செய்ய வேண்டும் என்பதை browse செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். Run டேபிற்கு சென்று, மேலே இணைத்திருந்த அப்ளிகேஷன்களை close அல்லது hide செய்த பிறகு, வேறு சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன் அல்லது கோப்புகளை உடனே திறக்க வேண்டும் என்பதை இணைத்துக் கொள்ளலாம்.

இயங்குதளம்: விண்டோஸ் 98/ME/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:740.9KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget