மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளை ஒட்டி சன் டிவியில் ஒஸ்தி, கலைஞர் டிவியில் ஹே ராம், விஜய் டிவியில் அவன் - இவன் உள்ளிட்ட சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்காக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன் தொடங்கி ஜெயா, கலைஞர், விஜய் என சொல்லி வைத்தது போல பெரும்பாலான சேனல்களில் ‘தாண்டவம்' குழுவினரின்
பேட்டி இடம்பெறுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவிற்கு வந்துள்ள ஸ்ரீதேவியின் பேட்டி கலைஞர் டிவியிலும், ஜெயா டிவியிலும் இடம் பெறுகிறது.
சிறப்புத் திரைப்படங்களாக சன் டிவியில் காலையில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா, மதியம் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஒளிபரப்பாகிறது. இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக மாலை 6 மணிக்கு சிம்பு நடித்த ஒஸ்தி ஒளிபரப்பாகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் காந்தி திரைப்படமும், மாலையில் கமல் நடித்த ஹே ராம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் காலை 11 மணிக்கு விஷால், ஆர்யா நடித்த அவன் - இவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.